Dolly Sohi Death: கர்ப்பப்பை புற்றுநோயால் சோகம்: பிரபல சின்னத்திரை நடிகை 48 வயதில் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல நடிகை டோலி சோஹி காலமானார்.
மார்ச் 08, புதுடெல்லி (New Delhi): பிரபல பாலிவுட் சீரியல் நடிகை டோலி சோஹி (Dolly Sohi) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சோகமான விஷயம் என்னவென்றால், அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்த டோலியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி (Amandeep) மஞ்சள் காமாலை பாதிப்பால் காலமானார். TN Weather Report: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!
ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரண்டு சகோதரிகள் உயிரிழந்துள்ளது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பலரும் இவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியில் பல ஹிட் சீரியல்களில் இவர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Mar 08, 2024 07:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

