Bigg Boss Tamil Season 8: மீண்டும் வருகிறாரா ஆண்டவர்? விலகப்போகிறாரா மக்கள் செல்வன்?!
பிக் பாஸ் நிகழ்ச்சியினை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில், மீண்டும் கமல்ஹாசன் ரீஎண்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 27, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். நடிகர் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான். இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 42 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, ஷிவ குமார், சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Squid Game Season 2 Trailer: "ஜெயிச்சா கண்டம்.. தோற்றா தண்டம்.." ஸ்குவிட் கேம் சீசன் 2: அசத்தல் ட்ரைலர் உள்ளே.. உலகளவில் டிசம்பர் 26ல் வெளியீடு.!
இந்த ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் மறைமுகமாக பேசாமல் போட்டியாளர்களின் முகத்திற்கு நேராக பேசி வருகின்றார். இருப்பினும் நிகழ்ச்சி சுவாரசியம் இல்லாமல் இருந்து வருகின்றது. தற்போது நிகழ்ச்சி சுவாரசியம் இல்லாமல் செல்வதால் கமல்ஹாசனை மீண்டும் வருவதற்கு மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு ஏற்ப மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவரான கோவை தங்கவேலு, கமல்ஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
(The above story first appeared on LatestLY on Nov 27, 2024 04:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

