Bigg Boss Tamil Season 8: அர்னவின் போலி முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட ரவீந்தர்; ஒரே வார்த்தையில் உண்மையை போட்டுடைத்த சம்பவம்.!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரமே வெளியேற்றப்பட்ட ரவீந்தர் சந்திரசேகர், சக போட்டியாளர்கள் குறித்து கருத்துக்கள் கூறியுள்ளார்.
அக்டோபர் 14, சென்னை (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். முதல் நாளே 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டார். மீண்டும் 4வது நாளிலேயே உள்ளேயும் வந்தார். இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் எவிக்ஷனில் வாக்குகளின் அடிப்படையில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். ரவீந்தர் வெளியேற்றம் பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
ரவீந்தர் எலிமினேஷன்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் என்று அறிவிக்கப்பட்டதும் அவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது விஜய் சேதுபதி முன்பு வந்ததும் விஜய் சேதுபதி நீங்கள் உள்ளிருந்து இப்போ வெளியே வந்து விட்டீங்க இந்த நிகழ்ச்சியை உள்ளிருந்து பார்த்த அடிப்படையில் எப்படி ரிவ்யூ செய்வீங்க என்று கேட்க, முதலில் விஜய் சேதுபதியை பாராட்டி பேசி இருந்தார். பின்னர் ஒவ்வொரு வரை குறித்தும் பேசினார். முதலில் அர்னவ் தான், அவரிடம் "அர்னாவ் பக்கா Fake, ஒழுங்கா விளையாடு" என்று சொன்னார். Tamil Rockers: வேட்டையன் படத்தை படம்பிடித்த தமிழ் ராக்கர்ஸ் கும்பலை சேர்ந்த இருவர் கைது; கேரளாவில் சிக்கிய குருவிகள்.!
சக போட்டியாளர்கள் குறித்து கருத்துக்கள்: சீரியல் நடிகர் அர்னவ் தன்னுடன் காதலில் கிசுகிசுக்கப்படும் அக்ஷிதாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிலையில், அர்னவ் முதல் மனைவி திவ்யா பிக் பாஸ் போக வேண்டும் என எல்லாரும் கூறிவருகின்றனர். அர்னவ் வீட்டில் நடிப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதாவது 24 மணிநேரத்தில் சாச்சனாவை டார்கெட் செய்து வெளியே அனுப்பிவிட்டீர்கள் என கண் கலங்கி அழுதார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர்... கட்டிய மனைவியை அடித்து கொடுமை செய்து விட்டு, பெற்ற மகளை இதுவரை ஒரு முறை கூட பார்க்காத உனக்கு, அவர்கள் மீது வராத பாசம், அவர்களுக்காக வராத அழுகை 24 மணிநேரம் பார்த்த ஒரு பெண்ணுக்காக வருகிறதா? என ட்ரோல் செய்தனர்.
தொடர்ந்து ரவீந்தர் தன்னுடைய ரிவியூவில், ரஞ்சித்திடம் "கிடைக்கிற இடத்தில் எல்லாம் சாமி, செல்லம், தங்கம் இப்படி எல்லாம் சொல்றதோ ஸ்டேட்டர்ஜி தான். ரொம்ப நாள் இதுல நடிக்க முடியாது. அதனாலதான் நானே வெளியே வந்துட்டேன். நீங்க உங்களுடைய இயல்பான விளையாட்டை விளையாடுங்க சார்" என்று சொல்லி இருந்தார். அடுத்ததாக தீபக்கிடம் "எப்பவும் எதிரியை முன்னாடி அடிங்க தீபக் பின்னாடி அடிக்க கூடாது. முன்னாடி பேசணும் பின்னாடி பேசக்கூடாது" என்று சொல்ல தீபக் முகம் இருண்டு போய்விட்டது. அடுத்ததாக அருண் பிரசாத் பற்றி பேசி இருக்கிறார்.
அதன் பிறகு அருணிடம் வந்த ரவீந்தர் ஒவ்வொருவரிடமும் முன்னும் பின்னும் பேசுவதாக கூறினார். இன்னோசண்ட் மாதிரி நடிக்கிற, தெளிவாக விளையாட என்றார். சத்யாவிடம் இங்கு மைண்ட் தான் முக்கியம் என்றார். அடுத்ததாக விஜே விஷாலை பற்றி பேசும்போதே "என்ன மன்னிச்சிடு விஷால் நான் உன்கிட்ட நடிச்சிட்டு தான் இருந்தேன். உன்னோட சாப்பாடுல இருந்து இப்ப தப்பிச்சுட்டேன். அதை சாப்பிட முடியலடா.." என்று கிண்டல் செய்து கொண்டு "யாரும் உனக்காக யோசிக்க மாட்டாங்க நீ தான் யோசிக்கணும். யார் யோசிக்கிறதையும் நீ பொது கருத்தா எடுத்துக்காத. இந்த வீட்டில என்டர்டைன்மென்ட் நீ தான்" என்று அவரை மட்டும் பாராட்டி இருந்தார்.
அடுத்ததாக ஜெஃப்ரி இடம் "வாயை, வார்த்தையை கவனமா பயன்படுத்து. அது உன் வாழ்க்கையை மாற்றும்" என்று சொன்னதும் ஓகே சார் என்று ஜெஃப்ரி ஆஜராகிவிட்டார். அடுத்ததாக முத்துக்குமரனிடம் இந்த தளத்தை எப்படி பயன்படுத்துகிற அறிவு, ஆற்றல், பேச்சு திறமை எல்லாம் இருக்கு. நான் நம்புகிற ஆளில் நீயும் ஒரு ஆள்" என்று பாசிட்டிவாக பேசியிருந்தார். வுந்தர்யாவிடம் பெஞ்ச தேய்க்கிறத நிறுத்து. தர்ஷா நீ விளையாடுறது போலியான விளையாட்டு. Oviya Thug Life Reply: என்னது என்னோட ஆபாச வீடியோ லீக் ஆகிருச்சா? தக் லைப் பதில் சொன்ன ஓவியா.. விபரம் உள்ளே.!
சுனிதாவிடம் வந்த ரவீந்தர் ஹானஸ்ட் ரியல் நீ. தமிழ்நாடு உன்னை நிச்சயமாக கொண்டாடும். அன்ஷிதா கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்து. தர்ஷிகா, நீ செம்ம கேடி என்றார். டுவிஸ்ட் கொடுப்பது கில்லாடி. சாச்சனா தேவைப்படும் போது பேசு. ஜாக்குலின் கேம் புரிஞ்சு விளையாடு என்றார். அடுத்ததாக ஆர் ஜே ஆனந்தியிடம் "நீ ஒரு நல்ல ஹியூமன். ஆனால் இந்த கேமை பயந்து பயந்து ரொம்ப நாள் தள்ளிட்டு போக முடியாது. சனி, ஞாயிற்றுக்கிழமையில ஸ்கோர் பண்றதை விட மீதி 5 நாள்ல ஸ்கோர் பண்றது தான் ரொம்ப முக்கியம் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார். இப்படி ஒவ்வொருத்தர் பற்றியும் விமர்சனம் செய்த கையோடு வீட்டிற்கு நடையை கட்டினார்.
சக போட்டியாளர்கள் குறித்து கருத்துக்கள் கூறிய ரவீந்தர் சந்திரசேகர்:
Fatman Review on all contestants🔥
Fatman Rocked 🔥🔥#BiggBossTamil8 #BiggBossTamil#BiggBossTamilSeason8
— Tharani ᖇᵗк (@iam_Tharani) October 13, 2024
(The above story first appeared on LatestLY on Oct 14, 2024 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

