Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. மக்களால் வெளியிடப்பட்ட 2வது ப்ரோமோ..!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8ன் 2வது ப்ரோமோ தற்போது வெளியானது.
செப்டம்பர் 11, சென்னை (Television News): விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) அறிமுகமாகி இருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி (BB Tamil Season 8) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் என்று ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில், மாகாபா ஆனந்த், பூனம் பஜ்வா, நடிகர் ரஞ்சித், ஜோயா, குரேஷி, அருண் பாரதி, ஜெகன், டிடிஎஃப் வாசன், ரியாஸ் கான், பிரீத்தி முகுந்தன் என்று பல பெயர்கள் இடம் பெற்று இருந்தது. இதில் யாரெல்லாம் நிகழ்ச்சியில் செல்வார்கள் என்று தெரியவில்லை. Desingu Raja 2: விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு நிறைவு.. இணையத்தைக் கலக்கும் புகைப்படம்..!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த சீசன்களுக்கான முதல் ப்ரோமோ ஏற்கனவே கடந்த வாரத்தில் வெளியானதை தொடர்ந்து, தற்போது மக்களால் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக அதன் ப்ரொமோ வீடியோவை மக்கள் வெளியிட்டுள்ளனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல ஒரே நேரத்தில் மாநிலத்தின் 10 இடங்களில் மக்களை வைத்து பிக் பாஸ் 8 ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 இடங்களில் ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
மக்களால் வெளியிடப்பட்ட ப்ரோமோ:
#BiggBossTamil8 Promo Launch #BiggBossTamil #VijayTV #VijayTelevision pic.twitter.com/1PKUxLOIf1
— BBTamilNadu (@BBTamilNadu) September 11, 2024
(The above story first appeared on LatestLY on Sep 11, 2024 06:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

