Sundari Tamil Serial: முடிவுக்கு வரும் சுந்தரி தொடர்.. ரசிகர்கள் சோகம்.!

"சுந்தரி 2" இறுதி எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

Sundari Tamil Serial: முடிவுக்கு வரும் சுந்தரி தொடர்.. ரசிகர்கள் சோகம்.!
Sundari (Photo Credit: Facebook)

அக்டோபர் 24, சென்னை (Cinema News): தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன டிவி என்றால் அது சன் டிவி தான். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள், சுந்தரி போன்ற சீரியல்கள் கடந்த வாரத்திற்கான டிஆர்பியில் டாப்பில் வந்துள்ளது. அண்மையில் வெற்றிகரமாக ஓடிய இனியா தொடர் முடிவுக்கும் வந்துள்ளது. VJ Vishal: மீசை, தாடியை எடுத்து, ஜிங்குனுமனி பாடலுக்கு மாஸ் காட்டிய விஜே விஷால்.. பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டாட்டம்.!

அப்படி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் சுந்தரி சீரியல் (Sundari). இதில் நாயகியாக நடித்து மக்களின் மனதை வென்றுள்ளவர் தான் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். சுந்தரி சீரியல் முதல் பாகத்தில், கணவனால் துரோகம் செய்யப்பட்ட கிராமத்து பெண், போராடி கலெக்டர் ஆகிறார். இரண்டாம் பாகத்தில், தனது கணவரின் மற்றொரு மனைவியின் குடும்பத்தை ஏற்றுக்கொண்டு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு, விரைவில் இறுதி எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

(The above story first appeared on LatestLY on Oct 24, 2024 02:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).