Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் போகும் மக்கள்.. வேற லவல் ட்விஸ்ட்.!

'பிக் பாஸ்' வீட்டிற்கு வந்த பொது மக்கள் போட்டியாளர்களிடம் சில கேள்விகளை கேட்டனர்.

Bigg Boss (Photo Credit: YouTube)

அக்டோபர் 25, சென்னை (Cinema News): பிக் பாஸ் கன்னட நிகழ்ச்சி (Bigg Boss Kannada) 2013-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. அப்போதிலிருந்து கன்னட நடிகர் கிச்சா சுதீப்தான் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வருகிறார். இதன் 11வது சீசன் இப்போது நடக்கிறது. அவர் தற்போது இந்தாண்டு பிக் பாஸ் சீசனுக்குப் பிறகு விலகிக் கொள்வதாக அறிவித்தார். Venom The Last Dance Review: வெனம் தி லாஸ்ட் டான்ஸ் திரைவிமர்சனம்: அரைத்த மாவையே அரைக்கும் வேரியன்ட்டு கதை.. கதறும் மார்வல் ரசிகர்கள்..!

பிக்பாஸ் 11: 26 நாட்கள் நிறைவடைந்துள்ள பிக்பாஸ் 11வது சீசன் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களின் தனியுரிமை பாதிக்கப்படுவதாக கடந்த வாரம் வழக்கறிஞர் ஒருவர் கடிதம் மூலம் மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதே நிகழ்ச்சியில் மனித உரிமைகள் மீறப்படுவதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சியை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிமன்றம், கலர்ஸ் கன்னட சேனலின் தயாரிப்பாளர்கள் மற்றும் எடிட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த மனு அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் உள்ளே நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் சாதாரண மக்கள் நுழைய அனுமதி இல்லை. ஆனால், 'பிக் பாஸ் கன்னட சீசன் 11'ல் அப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த மக்கள் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர். கலர்ஸ் கன்னட சேனல் இந்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் ப்ரோமோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement