Bigg Boss Contestant Receives Abusive Message: பிரபல தமிழ் பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை.. இருவர் கைது..!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்ட ஷெரீனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பிப்ரவரி 08, சென்னை (Chennai): பெங்களூரைச் சேர்ந்த மாடல் அழகி ஷெரினா(Sherina). இவர் பிக் பாஸ் சீசன் 6 (Bigg Boss) நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். இந்நிலையில் ஷெரினாவிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள், ஷெரீனாவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து பாலியக் சில்மிஷத்தில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர். இதனைக்குறித்து ஷெரீனா காவல் துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளார். Vilupuram Tragedy: விழுப்புரம் கல்குவாரியில் வெடி வைத்த போது மண்சரிவு.. இருவர் பலி..!
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர் தலைமறைவாக இருந்த டிரைவர் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இளையராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மயிலாடுதுறையில் பிடிபட்ட இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Feb 08, 2024 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

