Vijay Sethupathi | Kamal Hassan File Pic (Photo Credit: @chennaivision X | @Ayyappan_1504 X)

செப்டம்பர் 09, சென்னை (Cinema News): பிக் பாஸ் தமிழ் ஏழு சீசன்களின் வெற்றிக்குப் பிறகு 8-வது சீசன் (Bigg Boss Tamil) விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புதிய சீசனின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். முதலில் பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் என்ற செய்து வெளிவந்தது. Jayam Ravi - Aarthi Divorce: 15 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு.. ஜெயம் ரவிக்கு விவாகரத்து.. இதுதான் காரணமா?!

புதிய தொகுப்பாளர்:

இதனையடுத்து, புதிய தொகுப்பாளராக கமல்ஹாசனுக்குப் (Kamal Hassan) பதில் யார் வருவார்கள் என்பது குறித்து பல ஊகங்கள் இருந்து வந்த நிலையில், பிரபல நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) பிக் பாஸ் தமிழ் சீசன் 8-யை தொகுத்து வழங்குவார் என தெரியவந்தது. மேலும், பிக் பாஸ் தமிழ் 8-யின் புதிய ப்ரோமோவை கூட வெளியிட்டனர். அதில் விஜய் சேதுபதியை புதிய தொகுப்பாளராக அறிமுகமானார்.

விஜய் சேதுபதி சம்பளம்:

பிரபல ரியாலிட்டி ஷோவின் புதிய சீசனை தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்கப் போகிறார் என்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. இதன்படி, பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி ரூ. 50 கோடி வசூலிக்கிறார். இது, பிக் பாஸ் தமிழ் 7-யில் கமல்ஹாசனின் கட்டணத்தில் பாதிக்கும் குறைவானதாகும். மேலும், பிக் பாஸ் தமிழ் 7-க்கு ரூ. 120 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.