Viduthalai Part 2: விடுதலை படத்தின் 'தினம் தினமும்' பாடல் வெளியானது; லிங்க் உள்ளே.. மெய்சிலிர்க்க வைக்கும் இளையராஜாவின் குரல்.!

கேட்கும்போதே புல்லரிக்க வைக்கும் வகையில், இளையராஜாவின் குரலில் விடுதலை படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

Viduthalai Part 2: விடுதலை படத்தின் 'தினம் தினமும்' பாடல் வெளியானது; லிங்க் உள்ளே.. மெய்சிலிர்க்க வைக்கும் இளையராஜாவின் குரல்.!
Viduthalai Part 2 | Dhinam Dhinamum Song Out Now (Photo Credit: @Chrissuccess X)

நவம்பர் 15, சென்னை (Cinema News): கடந்த 2023ம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விடுதலை (Viduthalai). நடிகர் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையில் வெளியான பாடலும் மெகா ஹிட்டானது. இப்படம் இரண்டு பாகமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. Pushpa 2 The Rule Trailer: இன்று மாலை 06:03 மணிக்கு வெளியாகிறது புஷ்பா 2 படத்தின் ட்ரைலர்.! 

விடுதலை இரண்டாம் பாகம் (Viduthalai Part 2):

அதனைத்தொடர்ந்து, இரண்டாவது படமும் விறுவிறுப்புடன் வெளியீடு பணிகளை மேற்கொண்டது. இந்த பாகத்தில் சில மாறுதலுடன் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர். விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெறுகின்றன.

தினம் தினமும் பாடல் (Dhinam Dhinamum Song):

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில், இளையராஜாவின் இசை மற்றும் குரலில் உருவான தினம் தினம் எனும் பாடல் வெளியாகியுள்ளது. இளையராஜாவின் காந்த குரலில் வெளியாகியுள்ள இப்பாடல், கேட்கும்போதே புல்லரிக்க வைக்கும் வகையில் இருக்கிறது. அதனை நீங்கள் கேட்டு மகிழுங்கள்.

தினம்-தினமும் பாடல்:

பாடலை ஸ்பாட்டிபை, யூடியூப் ம்யூசிக் உட்பட பல செயலிகளில் கேட்டு மகிழ:

(The above story first appeared on LatestLY on Nov 17, 2024 10:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).