Vijay Tv Bharathi Kannamma: இறுதி அத்தியாயத்தை நோக்கி பாரதி கண்ணம்மா - நெடுந்தொடர் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ் மக்கள் எப்போது பாரதியையும் - கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பீர்கள் என போர்க்கொடி தூக்கி வீதியில் இறங்குவார்கள் என்பது தெரியாமல் இருந்த நிலையில், சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியதாக ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 19: விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பாகி வரும் பல தொடர்களில், இன்று வரை ரசிகர்களிடம் தினம்தோறும் பதைபதைப்பை ஏற்படுத்தி வரும் நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா (Bharathi Kannamma).
இத்தொடரில் நாயகியாக ரோஷினி ஹரிபிரியன் கண்ணம்மா கதாபாத்திரத்திலும், நாயகனாக அருண் பிரசாத் பாரதி கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இதனைதவிர்த்து ரூபா ஸ்ரீ, பாரினா அசாத், கண்மணி மனோகரன் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா தொடர் எப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கும் என தமிழக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். ஏனெனில் சூழ்ச்சியை அறியாத கைப்பாவை பாரதி கண்ணம்மாவை வாட்டி வதைத்தது அப்படி. Animal Activits Naked Protest: “உங்களுக்கு எதுக்கு கம்பளி?.. விலங்குகளுக்குத்தான் தேவை” – விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆடையின்றி போராட்டம்.!
இறுதியாக வில்லியை அடையாளம் கண்ட பாரதி மனைவி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்க, வெற்று காகிதத்தை நம்பியவருடன் நான் குடும்பம் நடத்த இயலாது என பிரிந்து சென்றார். விவாகரத்தும் இருவருக்கும் கிடைத்துவிட, நெடுந்தொடரில் ட்விஸ்ட் வைத்த இயக்கக்குழு பாரதியின் சாலை மாற்றியது.
இந்த நிலையில், இன்று விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள பாரதி கண்ணம்மா ப்ரோமோவில் (Bharathi Kannamma Promo Today), நாடகம் இறுதிக்கட்டத்தை எட்டியதை போல பதிவிட்டு இருக்கின்றனர். இதனால் ஒருசில வாரங்களில் பாரதி கண்ணம்மா சீரியல் நிறைவு பெறலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 19, 2023 06:55 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Jan 19, 2023 06:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

