Minor Girl Gang Rape: 18 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 2 குற்றவாளிகளில் ஒருவர் கைது..!
மும்பையில் 18 வயது சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 09, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பை (Mumbai) பாந்த்ரா பகுதியில் 18 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் (Gang Rape) செய்யப்பட்டார். இந்த வழக்கில் 31 வயது குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். Five Year Old Boy Dies: கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்..!
இதுகுறித்த விசாரணையில், சிறுமி தனது மாமா வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் லிப்ட் தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, சிறுமி காரில் போதைப்பொருள் கலந்த குளிர்பானத்தை குடித்துள்ளார். சற்று நேரத்தில் மயக்கமடைந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர், சிறுமியிடம் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னாலோ அல்லது புகார் அளித்தாலோ கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர். ஆனால், சிறுமி நிர்மல் நகர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 14, 5695 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

