Cylinder Explosion: சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.. பலர் படுகாயம்..!
உத்தர பிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 22, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் (Bulandshahr) மாவட்டத்தில் நேற்று (அக்டோபர் 21) ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வெடிப்பு காரணமாக வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததுடன், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. Auto Kannadiga: ஆட்டோ கன்னடா கற்றுக்கொள்வது எப்படி?.. சிரமமே இல்லாமல் விளக்கமாக டிப்ஸ் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.!
இதுகுறித்த தகவலின்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி:
Bulandshahr Tragic accident due to cylinder explosion in Secunderabad Houses razed to the ground due to massive explosion, 5 killed 5 bodies including women and children have been recovered so far Many people are feared still buried under the debris Accident in #Ashapuri Colony… pic.twitter.com/nDAOW44ang
— Mansa Uniyal Journlist (@journlist_Mansa) October 21, 2024
(The above story first appeared on LatestLY on Oct 22, 2024 11:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

