ஆகஸ்ட் 09, டேராடூன் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அம்மாநிலத்தில் பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு (Flood) ஏற்பட்டு, வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. Serial Killer Arrest: சித்தியின் கொடுமையால் சைக்கோவான இளைஞன்; 6 பெண்கள் கொடூர கொலை.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்..!
இந்நிலையில், சம்பாவத் (Champawat) மாவட்டம், தனக்பூர் பூர்ணகிரி (Tanakpur to Purnagiri) சாலையில் கனமழை பெய்து வரும் நிலையில், நிரம்பி வழியும் கிரோரா வாய்க்காலில் (Kirora Drain) ஜீப் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. இதனை பார்த்த மக்கள் சத்தமிட்டு கத்தியுள்ளனர். அந்த ஜீப்பில் 9 பேர் இருந்தனர். அதில் 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 2 பேரை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
उत्तराखंड के टनकपुर पूर्णागिरि मार्ग पर तेज़ बारिश के बीच एक जीप उफनते किरोड़ा नाले में बह गई। सैंकड़ो लोगो की भीड़ हल्ला करने के अलावा कुछ नहीं कर सकी। जीप में 9 लोग सवार थे। 7 लोगो को सकुशल निकाला गया। जिनमें एक बच्ची की मौत हो गई। जबकि 2 लोग लापता है। लापता लोगों की तलाश की… pic.twitter.com/fto3QsGRZi
— TRUE STORY (@TrueStoryUP) August 9, 2024