Minor Girl Suicide: 10 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை; சுற்றுலா தலத்திற்கு கூட்டிச் செல்ல மறுத்ததால் நேர்ந்த சோகம்..!

மத்திய பிரதேசத்தில் சுற்றுலா தலத்திற்கு கூட்டி செல்ல தாய் மறுப்பு தெரிவித்ததால், 10 வயது சிறுமி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Suicide: 10 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை; சுற்றுலா தலத்திற்கு கூட்டிச் செல்ல மறுத்ததால் நேர்ந்த சோகம்..!
Hanging Suicide (Photo Credit: Pixabay)

மே 24, ஜபல்பூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் அமைந்துள்ள பள்ளியில் 10 வயது சிறுமி 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாவட்டத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமான பெடகாட்டுக்கு தன்னை கூட்டிச் செல்லுமாறு அவரது தாயிடம் கேட்டுள்ளார். இதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்து கண்டித்துள்ளார். இந்நிலையில், சிறுமி தொடர்ந்து பலமுறை வற்புறுத்தி கேட்டுள்ளார். இருப்பினும், அவரது தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். Brother Murder His Sister: தங்கையின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை; மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் கைது..!

இதனால், தான் விரும்பிய சுற்றுலா தளத்திற்கு தன்னை அழைத்துச் செல்லவில்லையே என்ற விரக்தியில், நேற்று மாடிக்கு சென்று அங்குள்ள கதவு திரையில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். பின்னர், இதனை பார்த்த அவரது தாய் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on May 24, 2024 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).