Minor Girl Rape: 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. ஆசிரியர் அதிரடி கைது..!
மத்திய பிரதேசத்தில் பள்ளி ஆசிரியரால் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 21, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், போபால் (Bhopal) நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 3 வயது மாணவி. ஒரு ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் (Rape) செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் செப்டம்பர் 18-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து, அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். Supreme Court YouTube Channel Hacked: உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக்.. கிரிப்டோ விளம்பரம் ஒளிபரப்பு..!
இதுதொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், ஆசிரியர் பள்ளியில் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை (Sexual Abuse) அளித்து வந்தது தெரியவந்தது. இதனிடையே பெற்றோர் மற்றும் இந்து அமைப்புகள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போபாலில் உள்ள ராட்கிளிஃப் பள்ளிக்கு மாவட்டக் கல்வி அதிகாரி என்.கே.அஹிர்வார் சீல் வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்:
#WATCH | District Education Officer NK Ahirwar Seals Radcliffe School In Bhopal After Massive Protests By Parents And Hindu Outfits#MPNews #MadhyaPradesh pic.twitter.com/SSjSyogGCd
— Free Press Madhya Pradesh (@FreePressMP) September 19, 2024
(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

