Road Accident: கார் மோதி வயதான தம்பதி பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!
கேரளாவில் சாலையோரத்தில் நின்ற வயதான தம்பதி மீது கார் மோதியதில் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 23, பாலக்காடு (Kerala News): கேரள மாநிலம், பாலக்காடு (Palakkad)மாவட்டம் கொடுவாயூரில் சாலையை கடக்க நின்ற கணவன்-மனைவி மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையை கடக்க சாலையோரத்தில் நின்றிருந்த வயதான தம்பதி மீது சாலையில் அதிவேகமாக வந்த கார் இருவர் மீது மோதிய (Car Accident) வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Wayanad Lok Sabha: வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னிலை.. 1.40 இலட்சம் வாக்குகள் வித்தியாசம்.. சிபிஐ., பாஜகவுக்கு பெரும் பின்னடைவு.!
இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். உயிரிழந்த தம்பதி பாலக்காடு மாவட்டம், நெம்மாரா வண்டாழி தெக்கேகாடு பகுதியைச் சேர்ந்த சாமி (வயது 65), அவரது மனைவி ஜானு (வயது 60) என அடையாளம் காணப்பட்டது. மேலும், காரை ஓட்டியவர் எலவாஞ்சேரியை சேர்ந்த பிரேம்நாத் என்பதும், அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இதோ:
ஒரு ஓரமாய் நின்ற கணவன் -மனைவி... நொடியில் எங்கிருந்தோ வந்த எமன்... ஒரே இடத்தில் மரணம்#kerala | #cctv pic.twitter.com/RTD7ctVaYa
— Thanthi TV (@ThanthiTV) November 23, 2024
(The above story first appeared on LatestLY on Nov 23, 2024 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

