ஜனவரி 23, அனந்தபூர் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், அனந்தபூரில் (Anantapur) உள்ள நாராயண ஜூனியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி ஆண்கள் வளாகத்தில், முதலாம் ஆண்டு படித்து வந்த சரண் என்பவர், திடீரென கல்லூரி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. Swiggy Delivery Boy Resigns: கறியை டெலிவரி பண்ண சொன்ன கம்பெனி.. வேலையே வேணாம் என சென்ற ஊழியர்.!
மாடியில் இருந்து குதித்து தற்கொலை:
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், சரண் இறந்ததில் அவரது குடும்பத்தினர் கல்லூரி நிர்வாகம் மீது சந்தேகிக்கின்றனர். மாணவர் ஏன்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான விவரம் தெரியவில்லை. காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.
சிசிடிவி காட்சி இதோ:
నారాయణ కాలేజీలో విద్యార్థి ఆత్మహత్య
AP: అనంతపురంలోని నారాయణ జూనియర్ కళాశాల బాయ్స్ క్యాంపస్లో ఇంటర్ ఫస్ట్ ఇయర్ చదువుతున్న చరణ్.. కాలేజీ భవనంపై నుంచి దూకి ఆత్మహత్య చేసుకున్నాడు. దీనికి సంబంధించిన సీసీటీవీ ఫుటేజ్ వైరల్ అవుతోంది. అయితే చరణ్ మృతిపై అతడి కుటుంబ సభ్యులు అనుమానం… pic.twitter.com/adcXIfXxlT
— ChotaNews App (@ChotaNewsApp) January 23, 2025