Couple Burnt To Death: இருசக்கர வாகனத்தின் மீது மின்சார கேபிள் அறுந்து விழுந்து விபத்து; தம்பதி உடல் கருகி சாவு..!

உத்தர பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மின்சார கேபிள் அறுந்து விழுந்ததில், தம்பதி இருவர் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Couple Burnt To Death: இருசக்கர வாகனத்தின் மீது மின்சார கேபிள் அறுந்து விழுந்து விபத்து; தம்பதி உடல் கருகி சாவு..!
Electric Cable Falls On Bike (Photo Credit: @timesofindia X)

ஆகஸ்ட் 03, புடான் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், புடான் மாவட்டத்தில் துதாரி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வேத் பால் (வயது 46)-மீனா தேவி (வயது 50). தம்பதி இருவரும் முசாஜாக் காவல்நிலையம் அருகே நேற்று (ஆகஸ்ட் 02) மாலை 5.30 மணியளவில் வாசிர்கஞ்சில் உள்ள தனது உறவினரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​110V உயர் அழுத்த மின்கம்பி (Electric Cable) அறுந்து, அவர்கள் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது. Mohanlal Visits Wayanad Landslide Spot in Army Uniform: வயநாடு நிலச்சரிவு; ராணுவ சீருடையில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்ட நடிகர் மோகன்லால்..!

இதில், இருசக்கர வாகனம் உடனே தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் தம்பதியினர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 03, 2024 04:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).