சொத்து தகராறில் மனைவி, மாமியார் தொல்லை.. விவசாயி விஷம் குடித்து தற்கொலை..!

உத்தர பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் மாமியாரின் தொல்லை தாங்காமல், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து தகராறில் மனைவி, மாமியார் தொல்லை.. விவசாயி விஷம் குடித்து தற்கொலை..!
Husband Suicide by Consuming Poison (Photo Credit: @TrueStoryUP X)

செப்டம்பர் 22, காஜியாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் உள்ள முகிம்பூரைச் சேர்ந்த விவசாயி மணீஷ் குமார். இவர், புலந்த்ஷாஹரின் அகமதுகார் காவல்நிலையப் பகுதியில் உள்ள ககாரியன் கேரா கிராமத்தில் வசிக்கும் வர்ஷாவை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவரது தம்பி ஹர்ஷ் குமாரும் வர்ஷாவின் உறவினரை மணந்தார். இந்நிலையில், தனது மனைவி வர்ஷா மற்றும் மாமியார் ஆகியோரின் துன்புறுத்தலால் விரக்தியடைந்து, பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தார். பில்குவா மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது, அவரது மரண அறிக்கை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. TCS Layoff Controversy: 12,000+ ஊழியர்கள் கட்டாய ராஜினாமா.. பணியாளர்களை மிரட்டி வெளியேற்றும் டிசிஎஸ்?

பரபரப்பு வாக்குமூலம்:

வைரலான வீடியோவில், திருமணமானதிலிருந்து, வர்ஷாவும் அவரது பெற்றோரும் தனது மூதாதையர் சொத்தை தங்கள் பெயருக்கு மாற்றுமாறு துன்புறுத்தி வந்தனர். கடந்த மாதம், வர்ஷா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அப்போது, மணீஷ் குமார் மனைவியை அழைத்துச் செல்ல தனது மாமியார் வீட்டிற்குச் சென்றார். அங்கு, மாமியார் மணீஷ் குமாரை மூதாதையர் சொத்தை தனது மனைவி வர்ஷாவின் பெயருக்கு மாற்றுமாறு வற்புறுத்தினர். மாற்றவில்லை என்றால், பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் முழு குடும்பத்தையும் சிறையில் அடைப்பதாக அவர்கள் மிரட்டினர். மேலும், மாமியார் அவரை "உங்களால் சொத்தை வர்ஷாவின் பெயருக்கு மாற்ற முடியாவிட்டால், நீங்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். எங்கள் வீட்டிற்கு ஒருபோதும் வரக்கூடாது" என்று கேலி கிண்டலுடன் மிரட்டல் விடுத்துள்ளார். மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு திரும்பிய பிறகு, மணீஷ் குமார் விஷம் குடித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டார்.

போலீஸ் விசாரணை:

தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, வர்ஷா உட்பட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.

(The above story first appeared on LatestLY on Sep 22, 2025 06:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).