Building Collapse Accident: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!

நவி மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Building Collapse Accident: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!
Building Collapse In Navi Mumbai (Photo Credit: @ANI X)

ஜூலை 27, நவி மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் ஷாபாஸ் கிராமத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில் 4 மாடி கட்டிடம் (Building Collapse) இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். Two People Died: ரயில் படிக்கட்டில் பயணித்த 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு..!

இந்த விபத்து சம்பவம் குறித்து நவி மும்பை தீயணைப்புதுறையின் துணை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இன்று அதிகாலை 4.50 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததாக தகவல் கிடைத்தது. விபத்தில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு சிலர் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை விரைவில் மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Jul 27, 2024 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).