ஜூலை 02, பெரோஸ்பூர் (Punjab News): பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் அபோஹர் செக்டார் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினர் (BSF Soldiers) வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் ஊடுருவ முயன்றுள்ளார். பாதுகாப்புப் படையினர் அவரை பலமுறை எச்சரித்தும் அவர் அத்துமீறி உள்ளே நுழைந்ததால், அவரை நோக்கி 3 முறை துப்பாக்கி சூடு நடத்தினர். Coconut Biscuit Recipe: குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் பிஸ்கட் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். உயிரிழந்த நபர் 25 வயதுடையவராக இருக்கலாம் என்றும், அவரை பற்றிய எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. இதனையடுத்து, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த அந்த நபரின் சட்டை பையில் சில சிகரெட்டுகள், லைட்டர் மற்றும் ஒரு இயர்போன் கண்டறியப்பட்டது.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
🚨🚨🚨Breaking 🇮🇳❌🇵🇰
📍Reportedly a Pakistani intruder was shot dead by alert BSF troop near fazilka area of international border in punjab
📍On July 1 and 2 night, at around 21:30, a Pakistani invader attempted to breach the border between India and Pakistan.
📍An alert BSF… pic.twitter.com/pUJonBxu34
— OsintTV 📺 (@OsintTV) July 2, 2024