
மே 02, புவனேஸ்வர் (Odisha News): ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் (Bhubaneswar) நகரில் கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT) அமைந்துள்ளது. இங்கு, நேபாளத்தின் பீர்குஞ்ச் பகுதியை சேர்ந்த பிரிஷா ஷா (வயது 18), முதலாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (மே 01) மாலை விடுதி அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். 5 மதுபாட்டில்களை குடிக்க ரூ.10 ஆயிரம் பந்தயம்.. 21 வயது வாலிபர் பரிதாப பலி..!
மாணவி தற்கொலை:
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக ஒடிசா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மாணவியின் மரணம் குறித்து ஒடிசா காவல்துறையினர் நேபாள தூதரகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தொடரும் தற்கொலை சம்பவம்:
இதற்கு முன்னதாக 3 மாதங்களுக்கு முன்பு கேஐஐடி-யில் பயின்று வந்த நேபாள மாணவி பிரகிருதி லாம்சலின் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், மற்றொரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.