Nurse Gang Rape: பெண் செவிலியர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. பெண்ணுறுப்பில் மிளகாய் பொடி வைத்து சித்ரவதை..!
உத்தர பிரதேசத்தில் பெண் செவிலியர் 4 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 29, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஜலான் (Jalaun) பகுதியை சேர்ந்த 30 வயது பெண், அப்பகுதியில் செவிலியராக (Nurse) பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். மேலும், இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (நவம்பர் 28) காலை அந்த பெண் தனது ஸ்கூட்டரில் வேலைக்குச் சென்றுள்ளார். Accused Arrested: காவல்நிலையத்தில் வேனுக்கு தீ வைப்பு.. தப்பியோட முயன்ற குற்றவாளி கைது..!
அப்போது, அவரை 4 பேர் வழிமறித்து அங்குள்ள புதருக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து, அந்த பெண்ணை 2 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்துள்ளனர். மேலும், மீதமுள்ள இரண்டு பேர் அந்த பெண்ணை கொடூரமாக அடித்து அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள் மற்றும் மரக்குச்சியை உள்ளே வைத்துள்ளனர். பின், அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அந்த பெண், தனக்கு நடந்த கொடுமைகளை தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 29, 2024 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

