Three People Murdered by Man: கணவன்-மனைவி தகராறு; பெற்றோருடன் காதல் மனைவி கொடூர கொலை.. கணவர் வெறிச்செயல்..!

கர்நாடகாவில் தனது மனைவி மற்றும் மாமனார் மாமியார் ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Three People Murdered by Man: கணவன்-மனைவி தகராறு; பெற்றோருடன் காதல் மனைவி கொடூர கொலை.. கணவர் வெறிச்செயல்..!
Crime Murder (Photo Credit: Pixabay)

ஜூலை 19, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டத்தில் உள்ள முனகல் கிராமத்தை சேர்ந்த தம்பதி நவீன் (வயது 28)-அன்னபூரணி (வயது 25). அன்னபூரணியின் தந்தை பசவராஜப்பா (வயது 52), தாய் கவிதா (வயது 45). நவீன-அன்னபூரணி ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் (Love Married Couple) செய்துகொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், நவீன் தனது மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடந்த ஓராண்டுக்கு முன்னர், தாவணகெரே மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு தனது குழந்தையுடன் சென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக தனது மனைவியை உடன் அழைத்து வர நவீன் பல்வேறு முயற்சிகளை செய்து வந்துள்ளார். இதனையடுத்து, நேற்று முன்தினம் அன்னபூரணி, அவரது பெற்றோர் ஆகியோர் நவீன் வீட்டிற்கு வந்துள்ளனர். பிறகு அவர்களை வழியனுப்ப நவீன் அவரது காரில் கூட்டிச் சென்றுள்ளார். அன்னபூரணியும் உடன் சென்றார். OnePlus 12 5G Offer Sale: ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் விற்பனை..! முழு விவரம் இதோ..!

அப்போது, நவீனுக்கும் அவரது மாமனார் மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அன்னபூரணி அவரது பெற்றோருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் தனது காரில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 3 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், கத்தியை எடுத்து 3 பேரையும் குத்தி (Stabbing To Death) கொடூரமாக கொலை செய்துள்ளார். இதன்பின்னர், அவர்களின் உடல்களை தனித்தனியாக காட்டுப்பகுதிக்குள் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சைதாப்பூர் காவல்துறையினர், அன்னப்பூரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், அவரது பெற்றோரின் உடலை தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், தலைமறைவாகியுள்ள நவீனை வலைவீசி தேடி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jul 19, 2024 07:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).