Brave Woman: வீட்டுக்குள் கொள்ளையடிக்க நுழைந்த மர்ம நபர்கள்.. துணிச்சலாக செயல்பட்ட பெண்.. வீடியோ வைரல்..!

பஞ்சாப்பில் வீட்டுக்குள் கொள்ளையடிக்க நுழைந்த முகமூடி கொள்ளையர்களுக்கு எதிராக பெண் ஒருவர் துணிச்சலாக செயல்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

Brave Woman: வீட்டுக்குள் கொள்ளையடிக்க நுழைந்த மர்ம நபர்கள்.. துணிச்சலாக செயல்பட்ட பெண்.. வீடியோ வைரல்..!
Brave Woman Single Handedly fended off three robbers (Photo Credit: @_India_trends_ X)

அக்டோபர் 03, அமிர்தசரஸ் (Punjab News): பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸை (Amritsar) சேர்ந்த பெண் மந்தீப் கவுர். இவரது கணவர், நகைக் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று மந்தீப் கவுர் தனது குழந்தைகளுடன் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, மூன்று முகமூடி கொள்ளையர்கள் (Robbers) அவரது வீட்டுக்குச் சென்றனர். கொள்ளையர்கள் வருவதை அறிந்த மந்தீப் கவுர், வேகமாக ஒடிச் சென்று கதவை மூட முயன்றார். மறுபக்கம் கொள்ளையர்கள் கதவைத் தள்ளி வீட்டுக்குள் நுழைய முயன்றனர். Doctor Murder Case: நடுஇரவில் திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல்.. மருத்துவர் சுட்டுக்கொன்ற பயங்கரம்..!

இந்நிலையில், தன்னுடைய முழு பலத்தையும் செலுத்தி அவர் கதவின் தாழ்பாளைப் பூட்டினார். பிறகு, அருகில் இருந்த சோபாவை எடுத்து கதவோடு சேர்த்து வைத்தார். மேலும், அவர் சத்தமிட்டு கூச்சலிடத் தொடங்கிய நிலையில் கொள்ளையர்கள் அந்த வீட்டைவிட்டு ஓடினர். இந்தக் காட்சிகள் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொள்ளையர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

துணிச்சலாக செயல்பட்டு கொள்ளையர்களை விரட்டிய பெண்:

(The above story first appeared on LatestLY on Oct 03, 2024 02:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).