Woman Suicide Attempt in UP (Photo Credit: @News18UP X)

டிசம்பர் 21, வாரணாசி (Uttar Pradesh News): ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் பாபேருவில் வசிக்கும் ஃபர்கான் என்பவர், தான் காதலிக்கும் பெண்ணுடன் உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசிக்கு 5 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். இவர்கள் இருவரும் ராம்கடோராவில் உள்ள எஸ்வி கிராண்ட் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, அங்கு 5 நாட்கள் தங்கியுள்ளனர்.

மூன்றாவது மாடியில் இருந்து குதித்த சிறுமி:

இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 19) மாலை, அந்த பெண் ஒரு நண்பருடன் போனில் பேசிக் கொண்டிருந்தபோது, இதனைப் பார்த்த அவரது காதலன் ​​ஃபர்கான் கோபமடைந்தார். அதன்பிறகு, புஷ்பா 2 படத்தை சேர்ந்து பார்க்க காதலி கேட்டுள்ளார். இதற்கு காதலன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த பெண் மூன்றாவது மாடியில் (Suicide Attempt) இருந்து குதித்துள்ளார். உடனே சிறுமி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காவல்துறையினர் விசாரணை:

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கு காரணமான அவரது காதலனை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ:

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..