Teenage Girl Pregnancy: இளம்பெண் கர்ப்பம் – திருமண ஆசை காட்டி ஏமாற்றிய வாலிபர்..!
நவிமும்பையில் 24 வயது இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ள முடியாது என வாலிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மார்ச் 18, நவிமும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை கோபர்கைர்னே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் தானே மாவட்டம் பயந்தர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வாலிபர் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், வாலிபர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். Minor Girl Sexual Harassment: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – பாதிரியார் வெறிச்செயல்..!
இதனையடுத்து, அந்த இளம்பெண் அவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வாலிபரிடம் கூறியுள்ளார். அந்த வாலிபர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதனால் கர்ப்பம் அடைந்த இளம்பெண் தன்னை அந்த வாலிபர் ஏமாற்றிவிட்டார் என்பதை உணர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் அந்த வாலிபரின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Mar 18, 2024 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

