Teenager Dies By Suicide: ரயில் கழிவறையில் வாலிபர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
மகாராஷ்டிராவில் ரயில் கழிவறையில் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 29, மும்பை (Maharashtra News): சத்தீஸ்கர் மாநிலம், பிலாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜக்பந்து சாஹு (வயது 28). இவர், சில தினங்களுக்கு முன் காணாமல் போனதாக காவல்துறையினரிடன் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மகாராஷ்டிரா செல்லும் இண்டரிசிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கழிப்பறையில், ஜக்பந்து சாஹு தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. Road Accident: கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பா? உண்மையில் நடந்தது என்ன? அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
இதனை அறிந்த காவல்துறையினர், மகாராஷ்டிரா கோண்டியா பகுதியில் உள்ள ரயில் நிலையத்துக்குச் (Railway Station) சென்று ஜக்பந்துவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஜக்பந்து தனது நண்பருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ மெசெஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘எனது காதலியும் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் தான் என்னுடைய தற்கொலைக்கு காரணம். தான் காதலிக்கும் அந்த பெண்ணை, திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். ஆனால், அவர்கள் எனது வீட்டில் பிரச்சனை செய்துவிட்டார்கள். அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார். கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 29, 2024 06:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

