Young Girl Murder: இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கத்தியால் குத்திக்கொலை.. காதலன் தலைமறைவு..!
கர்நாடகாவில் வாலிபர் தனது காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 28, பெங்களூரு (Karnataka News): அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாயா கோகாய் (வயது 19). கேரளாவை சேர்ந்த ஆரவ் (வயது 26). இவர்கள் இருவரும் பெங்களூரில் (Bengaluru) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தனர். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில், காதல் ஜோடி வேலையை விட்டு வெளியேறினர். இதன் பின், 7 மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் மாயா வேலைக்கு சேர்ந்தார். ஆரவிற்கு வேலை கிடைக்கவில்லை. Road Accident: திடீரென சாலையை கடந்த பள்ளி மாணவர், பைக் மோதி படுகாயம்.. நெஞ்சை பதறவைக்கும் காணொளி..!
அப்போது, மாயா இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் பதிவிடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் அவரை கண்டித்துள்ளார். மேலும், மற்றொரு நபருடன் மாயா பேசி வந்ததையும் அறிந்த ஆரவ் ஆத்திரத்தில் தனது காதலியை கொலை செய்ய திட்டமிட்டார். இந்நிலையில், நவம்பர் 23-ஆம் தேதி, இந்திரா நகரில் உள்ள ஹோட்டலில் இருவரும் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது, நவம்பர் 24-ஆம் தேதி ஆரவ் தனது காதலியின் கழுத்தை நெரித்து, கத்தியால் குத்திக்கொலை (Murder) செய்தார். பின் கால் டாக்சி மூலம் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, மேற்கொண்ட விசாரணையில், காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்வதற்கு, அவர் ஆன்லைன் மூலம் கயிறு வாங்கியுள்ளார். அவர் தப்பிச் சென்ற காரின் நம்பரை, கண்காணிப்பு கேமரா மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆரவிற்கு சொந்த ஊர் கேரளா என்பதால், ஒரு குழுவினர் கேரளாவிற்கும், மற்றொரு குழுவினர் கர்நாடகாவிலும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 28, 2024 06:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

