திருமணமாகி 5 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
உத்தர பிரதேசத்தில் திருமணமாகி 5 மாதங்களே ஆன இளம்பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை (Woman Suicide Case) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 22, பரேலி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் குளோடியா காவல்நிலைய எல்லைக்கு உட்பட பகுதியை சேர்ந்தவர் பூஜா. இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 21) அவரது வீட்டில் உள்ள அறையில் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. வாலிபர் விவரீத முடிவு..!
இளம்பெண் தற்கொலை:
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பூஜாவின் சகோதரர் கரண் வாக்குமூலம் அளித்தார். பூஜா தன்னிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தனது மாமியார் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், தான் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்தார். என்னால் இனிமேல் சித்திரவதையை தாங்கிக்கொள்ள முடியாது. நான் சீக்கிரமே இறந்துவிடுவேன் எனக் கூறிவிட்டு செல்போனை ஆப் செய்தார்.
போலீஸ் விசாரணை:
இதனையடுத்து, அவர் தற்கொலை (Suicide) செய்துகொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது என கூறினார். தனது சகோதரியின் தற்கொலைக்கு காரணமான மாமியார், மாமனார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையினரிடம் தெரிவித்தார். காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.
(The above story first appeared on LatestLY on Aug 22, 2025 05:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

