Car Accident: 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்து; வாலிபர் பலி.. இருவர் மீது வழக்குப்பதிவு..!
மும்பையில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 31, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், கோரேகான் (Goregaon) பகுதியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 29) அதிகாலை நவீன் வைஷ்ணவ் (வயது 24) என்ற வாலிபர், அவரது இருசக்கர வாகனத்தில் பால் விநியோகம் செய்துகொண்டிருந்தார். அப்போது, சிறுவன் ஓட்டிச் சென்ற எஸ்யூவி (SUV) மஹிந்திரா ஸ்கார்பியோ கார் அவர் மீது வேகமாக மோதி விபத்து (Accident) ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிகாலை 4 மணியளவில் ஆரே காலனியில் நடந்துள்ளது. இதில், நவீன் வைஷ்ணவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். Sexual Complaint Against Director Ranjith: ஹேமா கமிட்டி அறிக்கை; இயக்குநர் ரஞ்சித் மீது ஆண் நடிகர் பாலியல் புகார்..!
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, காரை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், எஸ்யூவி உரிமையாளர் இக்பால் ஜிவானி (வயது 48) மற்றும் அவரது மகன் முகமது பாஸ் இக்பால் ஜிவானி (வயது 21) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 17 வயது சிறுவன் வாகனத்தை ஓட்டிய போது, அவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை அறிய அவரது இரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Aug 31, 2024 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

