Tunisha Sharma: நடிகை துனிஷா மர்ம மரணம் விவகாரம்; ஐபோனை அன்லாக் செய்த அதிகாரிகள்.. வெளிவரும் பகீர் உண்மைகள்?..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலிவுட் திரைஉலக மக்களிடையே வரவேற்பை பெற்ற இளம் நடிகை துனிஷா ஷர்மா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார்.

Tunisha Sharma: நடிகை துனிஷா மர்ம மரணம் விவகாரம்; ஐபோனை அன்லாக் செய்த அதிகாரிகள்.. வெளிவரும் பகீர் உண்மைகள்?..!
Tunisha Sharma iPhone (Credit: Instagram Pixabay

டிசம்பர் 29, மும்பை: ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலிவுட் திரைஉலக மக்களிடையே வரவேற்பை பெற்ற இளம் நடிகை துனிஷா ஷர்மா (Actress Tunisha Sharma). இவருக்கு 20 வயதாகும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை (Tunisha Sharma Mystery Death Case) செய்துகொண்டு உயிரை மாய்த்தார்.

இவரின் மரணம் தொடர்பான விசாரணையில் பல திருப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார் என வெளியான தகவல், கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் என்பதை பெருமளவு உறுதி செய்யும் வகையில் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, நடிகை துனிஷாவின் மரணமும் கொலை என நடிகை கங்கனா ரனாவத் உட்பட துனிஷா ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றன. விசாரணைக்காக துனிஷா உபயோகம் செய்து வந்த ஆப்பிள் ஐபோன் தடவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆப்பிள் ஐபோனை பொறுத்த வரையில் அது கூடுதல் பாதுகாப்பு சிறப்பம்சம் கொண்டது ஆகும். Friend Killed: மதுபோதையில் நடந்த தகராறு.. தேனியை பதறவைத்த கொலை.. கல்லைக்கட்டி இறக்கிய நண்பர்கள்.!

அதனால், மும்பை வாலிவ் காவல் துறையினர் ஆப்பிள் நிறுவனத்துடன் (Apple iPhone) பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து, ஆப்பிள் நிறுவனம் துனிஷாவின் செல்போனை அன்லாக் செய்ய பணியாளர்களை அனுப்பி வைத்தது. அவர்கள் துனிஷாவின் செல்போனை அன்லாக் செய்துள்ளனர்.

இதனால் துனிஷா யாருடன்? எப்படி? பேசினார். எந்த மன நிலையில் அவர் தற்கொலை என்ற முடிவுக்கு சென்றார் என்பது தொடர்பான விசாரணை சூடேறியுள்ளது. அவரின் தற்கொலைக்கான காரணம் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று துனிஷாவின் தாய் மற்றும் மாமா ஆகியோரின் வாக்குமூலங்கள் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 29, 2022 11:46 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Dec 29, 2022 11:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).