ஜனவரி 29, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், புனே (Pune) மாவட்டத்தில் உள்ள டான்ட் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற ஆங்கில வழிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜனவரி 22ஆம் தேதி 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம், மற்றொரு வகுப்பைச் சேர்ந்த மாணவியை பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்து கொலை செய்ய ரூ.100 தருவதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தை மறைக்க முயன்ற பள்ளி முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது டவுண்ட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Tree Fell on Female Teacher: மரக்கிளை முறிந்து விழுந்து விபத்து; பெண் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலி..!
சக தோழியை கொலை செய்ய திட்டம்:
இதுகுறித்த விசாரணையில், டவுண்டில் உள்ள பிரபல ஆங்கில வழி பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் புத்தகத்தில் பெற்றோரின் கையொப்பத்தை போலியாக இட்டுள்ளார். இந்த சம்பவத்தை அவரது வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் நேரில் பார்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆசிரியையிடம் சிறுமி புகார் அளித்துள்ளார். ஆசிரியையிடம் புகார் செய்ததற்காக சிறுமி மீது ஆத்திரமடைந்த மாணவி சிறுமியை பாலியல் வன்கொடுமை (Rape and Murder) செய்து கொலை செய்ய வேறு வகுப்பைச் சேர்ந்த மாணவரிடம் ரூ.100 கொடுத்துள்ளது தெரியவந்தது.
தீவிர விசாரணை:
இதனையடுத்து, நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். மேலும், சிறுமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, இந்த விவகாரத்தை பள்ளி நிர்வாகம் மறைக்க முயன்றது. இதனால், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுடன் சேர்ந்து பள்ளி முதல்வர் மீது புகார் அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.