Gun File pic (Photo Credit: Pixabay)

மே 11, லக்னோ (Uttar Pradesh News): உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் மாவட்டம், பிளாஹாபூர் கிராமத்தை சேர்ந்த அனுராக் சிங் (வயது 42), குடி பழக்கத்திற்கு அடிமையாகி, மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக அவரை போதை மறுவாழ்வு மையத்தில் (Drug Rehabilitation Center) சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால், அனுராக் சிங் தனது குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். Vivo X Fold 3 Pro: இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ..! முழு விவரம் இதோ..!

இந்நிலையில், இன்று காலை நடந்த தகராறில் அனுராக் சிங், தனது தாய் சாவித்ரியை (வயது 65) சுட்டுக் கொன்றார். இதன்பின்னர், மனைவி பிரியங்காவை (வயது 40) சுத்தியலால் பலமாக தாக்கி அடித்துக் கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, தனது 3 குழந்தைகள் ஆஸ்வி (வயது 12), ஆர்னா (வயது 8) மற்றும் ஆத்விக் (வயது 4) ஆகியோரை மாடியில் இருந்து கீழே வீசியுள்ளார். இதில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். போதையில் நிலை தடுமாறிய அவர் இறுதியில், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த பிளாஹாபூர் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். போதைக்கு அடிமையாகி, வீட்டில் உள்ள அனைவரையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.