Air India Pilot: பெண் தோழியுடன் விமானத்தில் ஜாலி ட்ரிப்.. விமானிகள் அறைக்குள் அனுமதித்த விமானியால் சர்ச்சை.!
விமானி தனது பெண் தோழியை விமானிகள் அறைக்குள் அழைத்து பயணம் செய்ததாக சர்ச்சை புகார் எழுந்து விசாரணை நடந்து வருகிறது.
ஏப்ரல் 21, டெல்லி (New Delhi): கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி துபாயில் இருந்து புது டெல்லிக்கு ஏர் இந்திய விமானம் பயணம் செய்துள்ளது. இந்த பயணத்தின்போது, விமானியாக பணியாற்றி வந்தவர் தனது பெண் தோழியை விமானிகள் அறைக்குள் அனுமதித்து இருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பான உண்மை சக விமானியின் விமானியின் மூலமாக பல மாதங்கள் கடந்து விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, துறை ரீதியான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்ட அதிகாரிகள், விசாரணைக்கு பின்னர் நடந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். Twitter Blue: ட்விட்டர் புளூ வெரிபைட்டுகளை நீக்கம் செய்த எலான் மஸ்க்.. அதிரடி மாற்றத்தின் அறிவிப்பு இதோ.!
முதற்கட்ட விசாரணை தகவலின்படி, கடந்த 27ம் தேதி விமானியின் பெண் தோழி டெல்லிக்கு திரும்பவிருந்த நிலையில், அவருக்கு பிசினஸ் கிளாசில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஆனால், அன்று பிசினன்ஸ் கிளாசில் இடம் கிடைக்கவில்லை.
இதனால் விமானி தனது பெண் தோழியை விமானியின் அறைக்குள் அனுமதி செய்து பயணித்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் உறுதியாகியுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து வருகிறது. விமானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
(The above story first appeared on LatestLY on Apr 21, 2023 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

