Family Members 4 Died by Suicide: பணப்பிரச்சனையால் சோகம்: ஆந்திர தம்பதி, வாரணாசியில் குழந்தைகளுடன் தற்கொலை.. 4 பேரின் சடலம் மீட்பு.!

பணம்தான் உலகின் அணைத்து விஷயங்களுக்கும் முக்கியம் என்றாகிய பின்னர், அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஏராளம். இதனால் தினமும் எங்கோ தற்கொலைகள் நிகழத்தான் செய்கின்றன.

Suicide File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 08, வாரணாசி (Uttar Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தம்பதிக்கு, 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் சொந்த ஊரில் வசித்து வரும் ஒருவருக்கும், தம்பதிகளுக்கும் இடையே பணத்தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

வாரணாசி சென்ற குடும்பம்: தம்பதிகள் தங்களது 2 மகன்களுடன் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து, உத்திரபிரதேசம் மாநிலம் வந்துள்ளனர். அங்குள்ள வாரணாசி, தேவநாதபுரா பகுதியில் செயல்படும் விருந்தினர் மாளிகையில் அறையெடுத்து தங்கி இருக்கின்றனர்.

பணியாளர்களுக்கு சந்தேகம்: இந்நிலையில், இவர்களின் அறையில் இருந்து எவ்வித ஆட்கள் நடமாட்டமும் இல்லை. அறை உட்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து, சந்தேகமடைந்த விருந்தினர் மாளிகை பணியாளர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். Chengalpattu Earthquake: செங்கல்பட்டை மையமாக வைத்து, 3.2 புள்ளிகள் அளவில் மிதமான நிலநடுக்கம்: தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.! 

கதவை உடைத்து சென்று கண்ட அதிர்ச்சி காட்சி:  சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கதவை உடைத்து உள்ளே சென்றபோது குடும்பத்தினர் நால்வரும் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

கடிதம் கைப்பற்றப்பட்டது: இவர்களின் அறையில் தெலுங்கு மொழியில் எழுதி வைக்கப்பட்ட கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தின் வாயிலாக பணத்தகராறு பிரச்சனை தெரியவந்துள்ளது. நால்வரின் சடலமும் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தம்பதிகளின் விபரம் தொடர்பாக அதிகாரிகள் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement