பிப்ரவரி 13, நாகோன்: அசாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பசுவதை (Assam Cow Slaughter Act) தடைச்சட்டத்தின் காரணமாக, போக்குவரத்துகள் உதவியுடன் பிற மாநிலத்தில் இருந்து பசுக்கள் மாநிலத்திற்குள் இறைச்சிக்காக கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அசாம் (Assam) மாநிலத்தில் உள்ள நாகோன் (Nagaon) மாவட்டத்தில் உள்ள போர்காட் பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே சென்ற லாரியை சோதனை செய்தபோது, அதில் 24 கால்நடைகள் அடைத்து வைக்கப்பட்டு கடத்துவது உறுதியானது. லாரியில் வந்த சஹாஜூல் ஷாக் (Sahajul Hoque), ஆகாஷ் அலி (Akash Ali) ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். Lovers Day Gift Tragedy: காதலிக்கு லவ்வர்ஸ் டே பரிசு கொடுக்க ஆடு திருடிய காதலன் நண்பரோடு கைது.. கூடா சவகாசம் கம்பி எண்ணும் சோகம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)