Leopard Attack: வேலியை தாண்டி பாய்ந்து காரில் மோதி பதறவைத்த சிறுத்தை.. ஆடிப்போன ஆம்னி வேன் ஓட்டுநர்.. வைரல் வீடியோ.!
வனத்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய சிறுத்தை 13 பேரை பதம்பார்த்துவிட்டு, காரில் அமைதியாக சென்றோரை ஒருகணம் பதறவைத்து பாய்ந்தோடிய நிகழ்வு நடந்துள்ளது.
டிசம்பர் 27, அசாம்: வனத்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய சிறுத்தை (Leopard Attack) 13 பேரை பதம்பார்த்துவிட்டு, காரில் அமைதியாக சென்றோரை ஒருகணம் பதறவைத்து பாய்ந்தோடிய நிகழ்வு நடந்துள்ளது.
அசாம் மாநிலம் (Assam Forest) மலை & காடுகள் சார்ந்த பகுதி என்பதால், வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது அதிகளவு இருக்கும். அவ்வப்போது யானை, புலி, சிறுத்தை போன்ற வன உயிரினங்கள் உணவு, தண்ணீர், இடமாற்றம் போன்ற காரணத்தால் மனிதர்கள் வாழும் பகுதிகளை கடந்து செல்வது வழக்கமான நிகழ்வாகும்.
அப்போது, மனிதர்களின் வாழ்விடங்களை வனவிலங்குகள் காணும்போது, மனிதர்களே அவைக்கு இரையாகும் (Wild Animals Attack) நிகழ்வும் நடக்கலாம். இந்த நிலையில், சிறுத்தையொன்று ஊருக்குள் புகுந்து வனத்துறை அதிகாரிகள் உட்பட 13 பேரை பதம்பார்த்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. Russian YouTubers: 60 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரத்தில் வித்தை காண்பித்த யூடியூபர்கள்.. சாகசம் செய்தவர்களுக்கு சட்டத்தால் காப்பு.!
அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹட் (Jorhat, Assam) பகுதியில் சிறுத்தை ஊருக்குள் புகுந்துள்ளது. இதனை விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். அந்த சிறுத்தை தனது ஆக்ரோஷம் மற்றும் பயத்தால் வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என 13 பேரை காயப்படுத்தி இருந்தது.
#WATCH | Assam: 13 persons including three forest staff were injured after being attacked by a leopard in Jorhat. All injured persons were immediately admitted to a local hospital. All the injured persons are out of danger: Mohan Lal Meena, SP, Jorhat (26.12) pic.twitter.com/TQ92Z248NR
— ANI (@ANI) December 27, 2022
சிறுத்தை தப்பி ஓடும் போது வேலியை தாண்டி குதித்து, சாலையில் சென்ற ஆம்னி காரை பதம்பார்த்து வாகன ஓட்டியை பதறவைத்து சென்றது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் உடல் நலத்துடன் இருப்பதாகவும், பெரியளவிலான காயங்கள் ஏதும் இல்லை என்று ஜோர்ஹட் காவல் கண்காணிப்பாளர் மோகன் லால் தகவல் தெரிவித்தார்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 27, 2022 01:35 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Dec 27, 2022 01:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

