மார்ச் 02, பெங்களூர்: ஆந்திரப்பிரதேசம் (Andra Pradesh) மாநிலத்தில் உள்ள கோணா சீமா, அம்பேத்கர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அப்பலு சௌதாரி. இவரின் மகள் லீலா பவித்ரா (வயது 28). அப்பலு தனது மகளின் படிப்புக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே சொந்த கிராமத்தில் இருந்து காக்கிநாடாவிற்கு குடிபெயர்ந்தனர். இவர்கள் வாடகை வீட்டில் இருந்து மகளின் படிப்பை கவனித்து வந்தனர்.
தனது மகளை கஷ்டப்பட்டு கல்லூரி வரையில் படிக்கச் வைத்து இருக்கின்றனர். அவர் பயின்று விசாகப்பட்டினம் (Visakhapatnam) தனியார் கல்லூரியில்,, ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னப்பேட்டை, வெள்ளிவளசை கிராமத்தை சேர்ந்த தினகர் (வயது 29) என்பவரும் படித்துள்ளார். இருவரும் முதலில் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இதுவே இவர்கள் இருவருக்கும் இடையே காதலாக மலரவே, கல்லூரி படிப்பை நிறைவு செய்த பவித்ரா கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரின் காதலர் (Love) தினகர் தெம்மாளூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
கல்லூரியில் படிப்பு நிறைவடைந்த பின்னர் தொடர்ந்த காதல் பணியிடத்திற்கு சென்றும் அப்படியே வளர்ந்துள்ளது. இதற்கிடையில், இவர்களின் காதல் விவகாரம் பவித்ராவின் வீட்டிற்கு தெரியவர, தினகர் மாற்று சமூக இளைஞர் என்பதால் பவித்ராவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெற்றோரின் கண்டிப்பால் பவித்ராவும் காதலருடன் பேசவில்லை. Erode East By Poll Result; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி..!
தனது அன்பு காதலியோடு பேச இயலாமல் தவித்து வந்த தினகர், விரக்தியடைந்து செய்வதறியாது இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவில் பவித்ரா வேலை முடித்து வரும் வரையில் காத்திருந்த தினகர், தனியாக பேச வேண்டும் என அழைத்து சென்றுள்ளார். அங்கு திருமணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
பவித்ராவோ பெற்றோர் சம்மதம் இன்றி எதுவும் நடக்காது என்ற முடிவில் உறுதியாக இருக்க, ஆத்திரமடைந்த தினகர் மறைத்து எடுத்து சென்ற கத்தியால் லீலாவின் உடலில் 16 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். வலியால் கதறித்துடித்த பவித்ரா அங்கேயே சரிந்து விழுந்து துடிதுடிக்க உயிரிழந்தார்.
உயிரிழந்த காதலி பவித்ராவின் உடல் அருகே தினகர் கத்தியுடன் இருப்பதை கண்டு பதறிப்போன பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தினகரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.