Bangalore Shocker: அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து தாய்-மகள் பரிதாப பலி: பெங்களூரில் சோகம்.!
நடைபாதையில் அருந்துகிடந்த மின்கம்பியால் தமிழகத்தை சேர்ந்த இருவர் பெங்களூரில் பலியான சோகம் நடந்துள்ளது.
நவம்பர் 19, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், கடுகோடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை சென்னையில் இருந்து பெங்களுர் சென்ற 23 வயது இளம்பெண் சௌந்தர்யா, தனது 09 மாத கைக்குழந்தை சுவிக்ஷவுடன் சாலையோரம் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
இந்நிலையில், சாலையோரம் மின்கம்பி அறுந்து கிடந்த நிலையில், அதனை கவனிக்காத சௌந்தர்யா, மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி இருக்கிறது. தாயும், மகளும் மின்கம்பியின் மீதே விழுந்துவிட, உடல் கருகி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். Miss Universe 2023: உலக அழகி பட்டத்தை வென்றார் ஷெய்னிஸ் பலாசியோஸ்..! விபரம் இதோ.!

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கடுகோடி காவல் துறையினர், தாய்-மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட மின்வாரிய பணியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிப்பட்டு வருகின்றன.
(The above story first appeared on LatestLY on Nov 19, 2023 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

