Bihar Shocker: 7 வயது மகளின் தலையை துண்டித்து கொலை செய்த கொடும்பாவி தந்தை; கணவன்-மனைவி சண்டையில் கொடூரம்.!

கணவன் - மனைவி சண்டையில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட, உறங்கிக்கொண்டிருந்த மகளுக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Bihar Shocker: 7 வயது மகளின் தலையை துண்டித்து கொலை செய்த கொடும்பாவி தந்தை; கணவன்-மனைவி சண்டையில் கொடூரம்.!
Girl Sad | Crime File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 03, ககாரியா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியா மாவட்டம், போரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அனுரூத் முனி. இவர் புலம்பெயர் தொழிலாளி ஆவார்.

அனுரூத் முனியின் மனைவி மமதா தேவி. தம்பதிகளுக்கு ஏழு வயதுடைய மகள், இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த முனி, அவ்வப்போது தனது மனைவியிடம் சண்டையிடுவது வழக்கம்.

இந்நிலையில், சம்பவத்தன்று நடந்த சண்டையில் ஆத்திரமடைந்த மனைவி மமதா தேவி, தனது தாயாரின் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆத்திரத்தில் இருந்த முனி, அதிகாலை 4.30 மணியளவில் சகோதரர்களுடன் உறங்கிக் கொண்டிருந்த தனது மகளை எழுப்பி இருக்கிறார். Deepawali Gift to Employees: அடிசக்க.. தீபாவளி பரிசாக, 15 ஊழியர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசு; இன்ப அதிர்ச்சி கொடுத்த நீலகிரி தேயிலைத்தோட்ட உரிமையாளர்.! 

சிறுமியை கூர்மையான ஆயுதம் கொண்டு, கழுத்தை வெட்டி தலையை துண்டித்து கொடூர கொலை செய்துள்ளார். சிறுமி கழுத்தறுக்கப்பட்ட போது அலறிய நிலையில், அவரின் அளவை சத்தம் கேட்டு எழுந்த இரண்டு சகோதரர்களும் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கின்றனர்.

பின் அக்கம்-பக்கத்து மக்களிடம் அபயக்குரலுடன் உதவிக்கேட்க, அவர்கள் விரைந்து வந்து அதிர்ச்சி காட்சிகளை கண்டுள்ளனர். இதனையடுத்து, இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Nov 03, 2023 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).