Bihar Police: பாட்னா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் அதிரடி கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
மதுபோதையில் காவல்துறை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
ஏப்ரல் 12, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா (Patna Airport) விமான நிலையங்களில் வெடிகுண்டு (Bomb Intimation) வைக்கப்பட்டுள்ளது என்றும், அவை இன்னும் சற்றுநேரத்தில் வெடித்து சிதறும் என்றும் அம்மாநில காவல் கட்டுப்பாட்டு (State Police Control Room) அறைக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டவர் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் விமான நிலைய காவல் துறையினரை தொடர்பு கொண்டு உஷார்படுத்திய அதிகாரிகள், உடனடியாக தீவிர சோதனை நடத்தினர். இதனால் விமான நிலைய பயணிகளும் பதைபதைப்பாகினர். அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வந்ததன் விளைவாக, அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதியானது. Aside:Man Shocking Moment: கோபத்தில் எதிரே வந்த 2 பெண்களை தாக்கிய நபர்.. பதறவைக்கும் வீடியோ.. நிலைகுலைந்த மூதாட்டி.!
இதனையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர் குறித்து விசாரிக்கையில், அவர் சுதன்ஷு சேகர் என்ற முகுந்த் என்பது தெரியவந்தது. இவர் மனதளவில் பாதிக்கப்பட்டவர் என்றும், மதுபோதையில் போனில் தொடர்பு கொண்டு அதிகாரிகளை அலைக்கழித்ததும் தெரியவந்தது.
#WATCH | Search operation underway by bomb squad team at Bihar's Patna airport after a bomb threat call was received here. pic.twitter.com/HajtWw96L5
— ANI (@ANI) April 12, 2023
(The above story first appeared on LatestLY on Apr 12, 2023 06:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

