Brother Raped His Sister: 14 வயது சிறுமி கர்ப்பம்; உடன் பிறந்த சகோதரன் வெறிச்செயல்..!
பெங்களூருவில் வீட்டில் தனியாக இருந்த அண்ணன்-தங்கை இருவரும் செல்போனில் ஆபாச படம் பார்த்து, தனது தங்கையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 22, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகலகுண்டே பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு 14 வயதில் ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் வரை, இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்கள். எனவே, இவர்களின் பொழுதை கழிக்க பெற்றோர் செல்போனை கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். Xiaomi CIVI Series Teaser: சியாமி CIVI சீரிஸ் டீஸர் வெளியீடு; விரைவில் ஸ்மார்ட் போன் அறிமுகம்..!
இந்நிலையில், இவர்கள் இருவரும் செல்போனில் ஆபாச படங்களை பார்த்துள்ளனர். இதன் விளைவாக, தனது சகோதரியை மிரட்டி, அவரது அண்ணன் பாலியல் வன்கொடுமை (Minor Girl Rape) செய்துள்ளார். இதனால், 14 வயது சிறுமி கர்ப்பமடைந்தார். ஆரம்பத்தில் இந்த விஷயம் பெரிதாக வெளியில் தெரியவில்லை. பின்னர், 3 மாதங்கள் கழித்து சிறுமிக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு சிறுமியை பரிசோதித்ததில், சிறுமி கர்ப்பமான விஷயம் தெரியவந்தது. இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல்துறையினர் கர்ப்பத்திற்கு காரணம், உடன் பிறந்த அவரது சகோதரன் தான் என்பதை கண்டுபிடித்து உறுதி செய்தனர். எனவே, அந்த சிறுவனை கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on May 22, 2024 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

