Niranjan Hiranandani Travel Mumbai Train: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மின்சார இரயிலில் பயணம் செய்த தொழிலதிபர்..! விபரம் இதோ.!
முதல்தர ஏசி வகுப்பில் தொழிலதிபர் திடீரென மின்சார இரயிலில் பயணம் செய்தார். பலரையும் நேரில் சந்தித்து மகிழ்ச்சியாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணத்தை தொடர்ந்தார்.
டிசம்பர் 30, மும்பை (Mumbai): ஹிரானந்தனி குழுமத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருபவர் நிரஞ்சன் ஹிராநந்தனி (Niranjan Hiranandani). இந்திய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் நிரஞ்சன், தற்போது மும்பை புறநகர் மின்சார இரயிலில் பயணம் செய்துள்ளார்.
விரைந்த போக்குவரத்துக்கு இரயில் பயணம்: மும்பையில் உள்ள உல்சா நகர் பகுதிக்கு விரைந்து செல்ல, நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரஞ்சன் இரயிலில் பயணம் செய்தார். முதல்தர ஏசி வகுப்பில் பயணம் செய்த நிரஞ்சன், அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இந்திய செல்வந்தர்களில் முக்கியமானவர்: நிரஞ்சன் ஹிராநந்தனி உலக செல்வந்தர்கள் மற்றும் இந்திய செல்வந்தர்களுள் ஒருவர் ஆவார். இந்திய அளவில் முதல் 100 செல்வந்தர்களுள் ஐவரும் ஒருவர் ஆவார்.
மும்பை புறநகர் இரயில்: மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பை, முக்கியமான இந்திய நகரங்களில் இரண்டாவது ஆகும். இந்நகரின் மின்சார இரயில் சேவையை நாளொன்றுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பயணமும் கூட்ட நெரிசல் மிகுந்தவாறு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Dec 30, 2023 07:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

