ஏப்ரல் 29, காசியாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் வசித்து வருபவர் ராஜேஷ் குமார் சிங். இவர் எல்லை பாதுகாப்பு படையில் (Former Border Security Force Soldier) பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தற்போது, தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவருக்கும், விபுல் (வயது 25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த 6 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்துள்ளனர். மேலும், இவர்களுக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. Benefits Of Ponnanganni Spinach:பொன்னாங்கண்ணி கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளனவா..! விவரம் இதோ..!

இந்நிலையில், இதுபற்றி ராஜேஷுக்கு தெரியவர, இவர்களுக்கு இடையேயான நட்புறவிற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். மேலும், தனது மகளுடன் பேசுவதை நிறுத்துமாறு விபுலை எச்சரித்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது மகள் வசித்து வரும் குடியிருப்பிற்கு ராஜேஷ் வந்துள்ளார். அதே குடியிருப்பில் விபுல் வசித்து வந்துள்ளார். அப்போது, விபுலை அழைத்து நேரில் பேச வேண்டும் என கூறியுள்ளார். பின்னர், விபுல் அங்கு வந்ததும் இருவரும் பேசியுள்ளனர்.

இச்சூழலில், இருவருக்கும் இடையேயான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராஜேஷ் திடீரென அவர் வைத்திருந்த துப்பாக்கியால் விபுலை 5 முறை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து விரைந்த வந்த காவல்துறையினர் விபுலின் உடலை மீட்டனர். பின்பு இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.