ஜூன் 30, டெல்லி (Delhi News): டெல்லியில் உள்ள புராரி பகுதியில் 68 வயது முதியவர், அவரின் 40 வயது மகன் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. தந்தை தனக்கு சூனியம் வைத்துள்ளதாக சந்தேகப்பட்ட மகன், அதனை கண்டறிய தந்தைக்கு தெரியாமல் வீட்டில் மொபைல் கேமிரா பொருத்தி இருக்கிறார்.
இந்த கேமராவில் பதிவான காட்சிகளை அவ்வப்போது மகன் சோதித்து பார்த்த நிலையில், முதியவரான தந்தை அண்டை வீட்டு சிறுமியை பலாத்காரம் செய்வது தொடர்பாக நிகழ்வு அம்பலமாகியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகன், வீடியோவில் இருந்த சிறுமி குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, சிறுமிக்கு 16 வயது ஆவதும், முதியவர் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததும் அம்பலமானது. இந்த வீடியோவை சிறுமியின் தந்தைக்கு அனுப்பி வைத்த அவர், இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். Digital India: ஆகஸ்ட் 15-க்குள் கிராம பஞ்சாயத்து பணப்பரிவர்தனைகளை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க உத்தரவு..!
தனது மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில் முதலில் தந்தையின் கொடூர செயலை அம்பலப்படுத்திய மகனே தந்தைக்கு ஆதரவாக சிறுமியின் தந்தையை மிரட்டியது அம்பலமானது. இதனால் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சிறுமியை நயவஞ்சகமாக வரவழைத்து முதியவர்கள் கொடூரம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.