Child Rape: 5 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த கொடூரம்.. 5 நாட்கள் கழித்து தலைமறைவு குற்றவாளி கைது..!

வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Child Rape: 5 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த கொடூரம்.. 5 நாட்கள் கழித்து தலைமறைவு குற்றவாளி கைது..!
Delhi Child Rape Case Accuse Arrested

டிசம்பர் 27, டெல்லி: வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி கடத்தி செல்லப்பட்டு (Child Kidnap & Rape) பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி மாநிலத்தில் உள்ள வடக்கு டெல்லி பால்ஸ்வா டைரி (Bhalswa Dairy, Delhi) பகுதியில் 5 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி சிறுமி தனது வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த இளைஞர் சிறுமியை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். வீட்டருகே விளையாடிய மகள் எங்கே சென்றார் என்பது தெரியாமல் பெற்றோர்கள் பதறிப்போன நிலையில், விடியவிடிய தங்களுக்கு தெரிந்த இடத்திற்கு சென்று தேடியுள்ளனர்.

பின்னர், டிசம்பர் 22ம் தேதி பால்ஸ்வா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிந்து, சம்பவ இடத்தில் இருக்கும் சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்து வந்தனர். Leopard Attack: வேலியை தாண்டி பாய்ந்து காரில் மோதி பதறவைத்த சிறுத்தை.. ஆடிப்போன ஆம்னி வேன் ஓட்டுநர்.. வைரல் வீடியோ.! 

இதனிடையே, சிறுமி அங்குள்ள பூங்காவில் இருப்பதாக தகவல் கிடைக்கவே, பெற்றோருடன் பூங்காவுக்கு சென்ற காவல் துறையினர் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்கையில் சிறுமியை மாலை 5 மணியளவில் கடத்தி செல்வது அம்பலமானது. அவருக்கு அதிகாரிகள் வலைவீசி தேடி வந்த நிலையில், இன்று குற்றவாளி அனில் பதாக் என்பவரை கைது செய்துள்ளனர். அவரின் மீது போக்ஸோ வழக்கு பாய்ச்சப்பட்டுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 27, 2022 02:10 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Jan 11, 2023 05:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).