Five Killed In Car Accident: கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்..!

மகாராஷ்டிராவில் சுற்றுலாவுக்கு சென்ற தெலங்கானாவை சேர்ந்த 5 பேர், கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Five Killed In Car Accident: கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்..!
Car Accident In Pune (Photo Credit: @ChotaNewsTelugu X)

ஜூலை 03, புனே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், புனே புறநகர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த 5 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள நாராயண்கேட்டைச் சேர்ந்த 6 இளைஞர்கள் கடந்த ஜூன் 30-ஆம் தேதி அன்று மும்பைக்கு சுற்றுலா (Tour) சென்றுள்ளனர். Traffic Diversions In Madurai: மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள்.. கோரிப்பாளையம் வழியாக செல்வபர்களுக்கான அறிவிப்பு..!

பின்னர், அங்கிருந்து நேற்றைய தினம் அஜ்மீர் தர்காவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​புனேவின் புறநகர்ப் பகுதியில் அவர்களது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை (Car Accident) இழந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த சையத் அமர் சிகிச்சைக்காக புனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்தில் சிக்கி பலியானவர்கள் மஹ்பூப் குரேஷி, ஃபெரோஸ் குரேஷி, ரபிக் குரேஷி, ஃபிரோஸ் குரோஷி மற்றும் மஜித் படேல் என தெரியவந்தது. மேலும், உயிரிழந்த அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Jul 03, 2024 10:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).