
ஜூன் 12, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கோடா கேம்ப் என்ற குதிரை பந்தய மைதானத்திற்கு அருகே விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து கரும்புகை எழும் அதிர்ச்சி காட்சிகளும் வெளியாகி உள்ளன. அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (Air India passenger aircraft) விபத்திற்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? (Air India Flight Crash):
இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக கூறப்படுவதால், விமான பயணிகளின் நிலை என்ன? என்பது குறித்து அவரது உறவினர்களும் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன. விபத்து நடந்தது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விமானம் வெடித்து சிதறியதும் உறுதியாகியுள்ளது. விமானம் மேலெழும்பும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. Air India Flight AI171: ஏர் இந்திய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன? குஜராத்தில் சோகம்.!
ஏர் இந்திய விமான விபத்து (Plane Crash)குறித்த தகவல் :
முதற்கட்ட தகவலின் படி, அகமதாபாத்தில் (Ahmedabad Plane Crash) இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம், விமான நிலையத்தில் ஓடுபாதையில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் மதியம் 1.17 மணிக்கு புறப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. பலத்த தீக்காயங்களுடன் ஏராளமானோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து தொடர்பாக பிரதமர் அலுவலகம் குஜராத் அரசிடம் கேட்டறிந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
825 அடி உயரத்தில் இருந்து விழுந்த விமானத்தில் பயணித்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி?
825 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து சிதறிய விமானத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் (Former Gujarat Chief Minister Vijay Rupani) பயணித்ததாக தகவல் கிடைத்துள்ளது. மீட்பு பணிகள் குறித்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்துள்ளார். தேசிய மற்றும் மாநில மீட்புப்படையினரும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானம் விழுந்து நொறுங்கிய வீடியோ :
Caught On Cam: Passenger plane crashes near Ahmedabad Airport.
This is horrible accident 💔
Hope for people safety where this blast happened and one more thing this time accountability must be given #PlaneCrash #Gujarat #Ahmedabad #ViralVideo
#planecrash pic.twitter.com/y5ufoNplL4
— Manjeet Ghoshi (@ghoshi_manjeet) June 12, 2025