Goa Mumbai Highway Accident: லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாப பலி.!

அதிகாலை 5 மணியளவில் ஒரே குடும்பத்தினர் பயணம் செய்த காரும் - கனகர லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 பேர் பலியாகினர்.

Goa Mumbai - Highway Truck Car Accident Visuals (Photo Credit: ANI)

ஜனவரி 19, ரத்னகிரி: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி (Ratnagiri, Maharashtra), குகாகர் நோக்கி இன்று அதிகாலை 5 மணியளவில் கார் ஒன்று பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர்.

அதேவேளையில், கோவா - மும்பை நெடுஞ்சாலையில் (Goa - Mumbai Highway) மும்பையை நோக்கி கனகர லாரி பயணம் செய்தது. இந்த இரண்டு வாகனங்களும் ராய்காட் பகுதியில் ரேபோலி அருகில் வருகையில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த குழந்தை உட்பட 9 பேர் (Car Truck Collision 9 Died on Spot)சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 1 குழந்தை படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. Shubman Gill Double Century: இமாலய இலக்கை பெற அடித்து நொறுக்கி சிங்கமாய் கர்ஜித்த ஷுப்னம் ஹில்.. இரட்டை சதமடித்து புதிய சாதனை.!

விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விபத்தில் உயிரிழந்தது யார்? என்ற விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காயத்துடன் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 19, 2023 09:48 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).